உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில்தானம் செய்தல் அவசியம் திருச்சி கல்யாணராமன் பேச்சு

மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில்தானம் செய்தல் அவசியம் திருச்சி கல்யாணராமன் பேச்சு

மதுரை, மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் சேதுபதி பள்ளியில் திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.வாலிமோட்சம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: இல்லறத்தை நடத்துவதே பெண் தான். கடவுள் இல்லை என்று சொல்வது சொல் பவரையும், அவரது குடும்பத்தையும் பாதிக்கும். ஒருவர் பக்தியாய் இருந்தால் பரம்பரை யும் நன்றாக இருக்கும். ஒரு காரியம் நடைபெற பலரது ஒத்துழைப்பு அவசியம். தானம் செய்தல் வேண்டும். தர்மம் தலை காக்கும்.

நல்லதை எண்ண வேண்டும். நல்லவர்களோடு கூட்டு சேரவேண்டும், என்றார். இன்று 15ல் அசோக   வனத்தில் அன்னை என்ற தலைப்பில் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !