உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் நாகாத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்

ப.வேலூர் நாகாத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்

ப.வேலூர்: பொத்தனூர், தண்ணீர்பந்தல்மேடு விநாயகர் நகர் செல்வகணபதி, நாகாத்தம்மன், கருப்பணார் கோவில் திருவிழா, நேற்று துவங்கியது. மதியம், 12:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக மினி ஆட்டோவில் நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மாவிளக்கு, தீபாராதனை நடந்தது. இன்று காலை, கிடாவெட்டுதல், நாளை (மே 17)ல் நாகாத்தம்மன் திருவீதி உலா நடக்கவுள்ளது. மாலை, 3:00மணியளவில், மஞ்சள் நீர் விளையாடுதல் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !