/
கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்திருவிழா அம்மன் தேரோட்டம்
திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்திருவிழா அம்மன் தேரோட்டம்
ADDED :2703 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நேற்று (மே 15)ல் அம்மன் தேரோட்டம் நடந்தது. திருச் செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்திருவிழா, வரும், 20ல் கொடியேற் றத்துடன் துவங்க உள்ளது. முதல் நிகழ்வாக அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளிட்ட காவல் தெய் வங்களுக்கு, வழிபாடு செய்து, அமாவாசை திதியில் அம்மன் திருத்தேரோட்ட விழா நடக்கும். இது, பாரம் பரியமாக அமாவாசை தின இரவில் நடைபெறும். இதனால், இந்த தேரோ ட்டத்தை இருட்டுத் தேர் என மக்கள் அழைப்பர்.
நாளைடைவில் மருவி, திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது. இருளில் இழுக்கப்பட்ட தேர், கடந்த சில ஆண்டுகளாக, மாலையில் இழுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று(மே 15)ல் மாலை, 5:00 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து, நான்கு ரதவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். மாலை, 6:30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது.