மல்லசமுத்திரம் கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2812 days ago
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில், நேற்று (மே 15)ல் அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணி முதல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை, அபிகேம் ஆராதனைகள் நடந்தன. சுவாமி பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யபட்டு, வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.