உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவில் திருவிழா: 5 ஆண்டுகளுக்கு பின் தூக்குத் தேர்

பகவதியம்மன் கோவில் திருவிழா: 5 ஆண்டுகளுக்கு பின் தூக்குத் தேர்

நாமக்கல்: அலங்காநத்தம் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பின், தூக்குத் தேரில் வீதி உலா நடந்தது. எருமப்பட்டி அடுத்த, அலங்காநத்தத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. சித்திரை, வைகாசித்திருவிழா கோலாகலமாக நடக்கும்.

இந்தாண்டு விழா, கடந்த, 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று காலை, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, 15 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவில் திருப்பணி மற்றும் கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்குத்தேர் திருவிழா நேற்று மீண்டும் நடந்தது. 26 அடி உயரம் கொண்ட தூக்குத்தேரில், பகவதியம்மனை அலங்கரித்து பக்தர்கள் தூக்கி வந்தனர் வழிநெடுகிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல், குதிரை வாகனத்தில் மதுரை வீரனை அலங்கரித்த சிறுவர்கள் தூக்கி வந்தனர். இரவு, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !