உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் சீதா கல்யாண மஹோத்ஸவ விழா

கிருஷ்ணகிரியில் சீதா கல்யாண மஹோத்ஸவ விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஏழாம் ஆண்டு சீதா கல்யாண மஹோத்ஸவ விழா நேற்று நடந்தது. கடந்த, 14ல், படப்பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. 15ல், மாலை, விக்னேஸ்வர பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. பின், அஸ்வத்நாராயணன் மற்றும் அக்ரஹாரம் சகோதரிகளின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், சேலம் புலவர் துரைவேங்கடரமணனின் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. 16ல், தியானம் திவ்யநாம பஜனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, உஞ்சவிருத்தி, தோடயமங்களம், குருகீர்த்தனை, கல்யாண அஷ்டபதி நிகழ்ச்சியும், தொடர்ந்து, 11:30 மணிக்கு, சீதா கல்யாண வைபவ மஹோத்ஸவ நிகழ்ச்சி நடந்தது. பின், பஜனை பாடல் பாடியபடி, நடனமாடி பெண்கள் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !