உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல்

காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல்

சென்னிமலை: சென்னிமலை அருகே, கோவில் விழாவில், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னிமலை காமாட்சியம்மன் கோவிலில், பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. பொறையன்காடு, களத்துக்காடு, மேலப்பாளையம் பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். மேலப்பாளையம் மாதேஸ்வரன் நகரில் இருந்து, கோவில் வரை, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பலர் பறவைக்காவடி அலகு குத்தியும், வேல் அலகு குத்தியும் வந்தனர். விழாவையொட்டி, காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !