நயினார்கோவிலில் வண்டிமாகாளி விழா
ADDED :2806 days ago
பரமக்குடி, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நயினார்கோவில் மருதவன மாகாளியம்மன் கோயிலில் வண்டிமாகாளி வேஷ விழா நடந்தது. இக்கோயிலில் மே 7 ல் கொடியேற்றப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிேஷகம், பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மே 15 ல் பொங்கல் வைபவம், தேரோட்டம் நடந்தது. மறுநாள் காளி வேடமிட்டவர் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் வண்டிமாகாளி வேஷம் அணிந்து வலம் வந்தார். மே 17ல் பால்குடம், அக்னிச்சட்டி விழாவும், நேற்று பூச்சொரிதலுடன் விழா நிறைவடைந்தது.