காளியம்மன் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :2704 days ago
கிருஷ்ணராயபுரம்: காளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்து, நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், காளியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, பொங்கல் வைத்தல், எருமை கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துதல், சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஏரளமானோர் பொங்கல் வைத்து, காளியம்மனை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.