நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல்: மோகனூர், நாவலடி கருப்பண்ண சுவாமி கோவிலில், ஜூன், 17ல் கும்பாபி?ஷகம் நடக்கிறது. அதில், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகனூரில், பழமை வாய்ந்த நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. முற்காலத்தில், இத்தலம் வழியாக சென்ற வணிகர்கள், தாங்கள் கொண்டுவந்திருந்த ஒரு கல்லை, நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில், கல்லை எடுக்க முடியவில்லை. அப்போது, பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசாமி, ’தானே கல்வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்தில் வைத்து கோவில் எழுப்பும்படியும்’ கூறினார். பக்தர்களும், கல்லை அப்படியே வைத்து கருப்புசாமியாக பாவித்து வணங்கினர். இவர், நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால், ’நாவலடியான்’ என்றும், ’நாவலடி கருப்பசாமி’ என்றும் பெயர் பெற்றார். இக்கோவிலில், 2002, ஜூன், 21ல் கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜகோபுரம் கட்டப்பட்டு, வரும், ஜூன், 17ல், கும்பாபி?ஷக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சிங்கையன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ’கும்பாபி?ஷக விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். ஜூன், 15ல் நடக்கும் தீர்த்தக்குட ஊர்வலத்தில், 50 ஆயிரம் பேர் பங்கேற்க செய்ய வேண்டும். மேலும், விழாவில், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என ஆலோசிக்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர்கள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.