உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் நாளை குருபூஜை

கைலாசநாதர் கோவிலில் நாளை குருபூஜை

நாமக்கல்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில் நாளை குருபூஜை நடக்கிறது. ராசிபுரம் கைலாச நாதர் கோவிலில், நாளை நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு கணபதி ?ஹாமம், காலை, 9:00 மணிக்கு கைலாசநாதர், அறம்வளர்நாயகி, சுப்ரமணியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்ளிட்ட உற்சவர்களுக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை, தொடர்ந்து, திருமஞ்சன வழிபாடு, மதியம், 12:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு கோவில் முழுவதும் விளக்கேற்றுதல், 5:30 மணிக்கு மகாதீபம், 6:00 மணிக்கு திருக்கோடி மகா தீபம் ஏற்றுதல், 6:30 மணிக்கு ஐம்பெரும் மூர்த்திகள், நமிநந்தியடிகள், சேக்கிழார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜகோபால், ஆய்வாளர் செல்வி, பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !