மகா மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :3069 days ago
தலைவாசல்: தலைவாசல், மகா மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா நடந்து வருகிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏரிக்கரை அய்யனார் கோவிலில் தொடங்கிய பால்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தது. பக்தர்கள், அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து, அம்மனுக்கு பாலபி?ஷகம் நடந்தது. மாலை, அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.