ஆகமவிதி என்பது என்ன? இது வேதத்தில் இருக்கிறதா?
ADDED :2810 days ago
“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்”என்பது திருமூலர் வாக்கு. மனிதர்கள் தர்ம வழியில் வாழ வழிகாட்டும் வேதம், ஆகமம் என்னும் இரண்டும் கடவுளால் அளிக்கப்பட்டவை. கோயில் நிர்மாணம், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், பூஜை முறைகளை விளக்குவது ஆகமம். இந்த முறையில் பூஜை செய்வதை ‘ஆகமவிதி பூஜை’ என்கிறோம்.