வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்!
ADDED :2730 days ago
வீட்டில் ஓயாத பிரச்னையா... காரணம், வீட்டின் வாஸ்து தோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து பலன் பெறுங்கள். தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை சூழ, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரிமந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது. வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.