இந்த வார பிரசாதம்
ADDED :2742 days ago
மாவு உருண்டை: அம்பாளுக்கு படைக்கும் விதத்தில் மாவு உருண்டை தயாரிக்கும் முறை.
என்ன தேவை:
பாசிப்பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 மி.லி.,
செய்வது எப்படி: வாணலியை சூடாக்கி, பருப்பை சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். சர்க்கரையையும் நைசாக அரைக்கவும். பின் மிதமான சூட்டில் நெய்யை காய்ச்சி வைக்கவும். அதில், பருப்பு மாவு, சர்க்கரையை சேர்த்து கிளறவும். மாவு சூடாகும் வரை கிளறியபின் இறக்கி சிறு சிறு உருண்டை களாக பிடிக்க சுவையான மாவு உருண்டை தயாராகி விடும்.