உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்

* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக ஏழைக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சிய ளிக்கும்.
* கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணை மிக்கவர் யாருமில்லை.
* விரதத்திற்காக பட்டினி கிடப்பதை விட, உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது.
* கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது.
* எல்லா உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள்.
* மனஒருமையுடன் கடவுளின் திருவடியை நினைக்கும் நல்லவர் களுடன் நட்பு கொள்ளுங்கள்.
* உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரோடு சேராதிரு ங்கள்.
* நல்லெண்ணத்தால் மனதை கனியச் செய்யுங்கள்.
* ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
* கோள் சொல்லிக் குடும்பத்தை கலைக்காதீர்கள்.
* பிறர் குற்றங்களை கவனிக்காமல் இருந்தாலே மனதிலுள்ள தீயஎண்ணம் மறையும்.
* இயற்கையை மாற்றும் தெய்வீக சக்தி நமக்குள் இருக்கிறது. – வழிகாட்டுகிறார் வள்ளலார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !