உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம்!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம்!

நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு, இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.திருமலை கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரண்டு பிரம்மோற்சவம் முதலில் நடத்தப்படும். பின்னர் நவராத்திரி பிரம்மோற்சவம் என்ற பெயரில் மற்றொரு பிரம்மோற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது. புராண கால வரலாற்றின்படி அதிக மாதம் வரும் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி கடந்த 2010ம் ஆண்டில், ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு முறை திருமலை கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது.கடந்த 2011ம் ஆண்டு வழக்கப்படி ஒருமுறை ஆண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. இதன்படி கணக்கிட்டால் அடுத்த 2013ம் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், இந்த 2012ம் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து திருமலை கோவிலின் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர், இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து எழுந்துள்ள கேள்விக்கு பதிலளித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிக மாதம் வரும்போது, திருமலை கோவிலின் ஐதீக முறைப்படி அந்த ஆண்டில் இரண்டு முறை பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிக மாதம் என்பது ஒரு ஆண்டு முன்பாகவே வந்துள்ளதால், அடுத்த 2013ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இரண்டு பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டில் நடைபெற உள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதன்படி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான தேதியையும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 18 முதல் 26ம் தேதி வரையில் ஆண்டு பிரம்மோற்சவமும், அக்டோபர் 15ம் தேதி முதல் 23 வரையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !