மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
                              ADDED :2718 days ago 
                            
                          
                          மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 10:15 மணிக்கு நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இரண்டாம் நாள் திரு விழாவான இன்று (மே 22) காலை 11:00 மணிக்கு மேல ஆவணி மூல வீதி கிருஷ்ணம்மாள் கட்டளை மண்டபத்திற்கு திருப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். முக்கிய நிகழ்வாக மே 24 கருட சேவை, மே 29 காலை 6:30 மணிக்கு தேரோட்டம், மே 31 தசாவதாரம் நடக்கிறது. விழா நடக்கும் பத்து நாட்களும் தினமும் காலை திருப்பல்லக்கு, இரவு அன்னம், சிம்மம், அனுமார், சேஷ வாகனங்களில் பெருமாள் எழுந்தருள்வார். ஏற்பாடுகளை இணை கமிஷனர் நடராஜன் (பொறுப்பு), துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.