பிரசன்ன வரதராஜ சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2723 days ago
ஓசூர்: சூளகிரி பிரசன்ன வரதராஜ சுவாமி கோவிலில் நடந்த, திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சூளகிரி கோட்டை தெருவில், பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், வரதராஜ சுவாமி ஜெயந்தி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. சுவாமிக்கு, விஸ்வக்சேன ஆராதனை, மகாசங்கல்பம், பஞ்சாமிர்த அபி?ஷகம், மகா சுதர்சன ஹோமம் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மங்கள ஆராத்தியை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. பின், சுவாமி உற்சவ ஊர்வலம் நடந்தது.