திருப்பரங்குன்றம் கோயிலில் மண்பானை பொங்கல்!
ADDED :5350 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது.வழக்கமாக சுவாமிக்கு வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து படைக்கப்படும். பொங்கலை முன்னிட்டு நேற்று மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து உச்சி கால பூஜையில், மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் முன் பானையுடன் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. அப்பானைகள் உற்சவர் முன் படைக்கப்பட்டது.