விநாயகர் கோவிலில் கத்தரி அபிஷேக விழா
ADDED :2810 days ago
திருக்கழுக்குன்றம்: வரசித்தி அன்னக்காவடி விநாயகர் கோவிலில், கத்தரி அபிஷேக விழா நடந்தது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலின் துணைக்கோவிலாக, வரசக்தி அன்னக்காவடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம், கத்தரி அபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மாலை, 52ம் ஆண்டு வைகாசி மாதம், கத்தரி அபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.