திண்டிவனம் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்!
ADDED :5128 days ago
திண்டிவனம் : திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் மாருதி பக்த ஜன சமாஜம் சார்பில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மாலை அரங்கநாதருக்கும், ஆண்டாள் பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனை சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையில் ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். ஆண்டாள் அரங்கநாதனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.