கரூர் மாரியம்மன் கோவில் விழா: கம்பத்துடன் திருவீதி உலா
ADDED :2735 days ago
கரூர்: மஹா மாரியம்மன் கோவிலில், திருவிழா நிறைவுநாளை முன்னிட்டு, கம்பத்துடன் திருவீதி உலா நடந்தது. கரூர், காந்திகிராமத்திலுள்ள மஹா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 13ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 18ல் பூத்தட்டு, 20ல், மாவிளக்கு, 21ல், அக்னிசட்டி எடுத்து பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கோவிலில் கம்பம் நட்டு வைத்து, பக்தர்கள் புனிதநீர் ஊற்றினர். பின்னர், கம்பம் எடுத்து வந்துவடக்கு காந்திகிராமம், தெற்கு காந்திகிராமம், இ.பி. காலனி, அசோக் நகர், கிருஷ்ணா நகர் வழியாக தெருக்களில் வீதி உலா சென்றது. வடக்கு காந்திகிராமம் அரசு நடுநிலைப்பள்ளி அருகிலுள்ள கிணற்றில், இரவு, 11:00 மணியளவில் கம்பம் விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.