உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாலகம்

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாலகம்

சென்னை: வடபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் ஏழாம் நாளில் தேர்  திருவிழா சிறப்பாக நடந்தது. முருகப்பெருமான் தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வடபழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, மே 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சென்னை, வடபழனியில் அமைந்துள்ள, வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவின் பிரதான நாளான இன்று (மே 25ம் தேதி) காலை, 7:10 மணிக்கு, திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமான் தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !