கமுதியில் இலந்தை செடியால் வேலி அமைத்து வழிபாடு
கமுதி: நவநாகரீக காலம் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும், பெரும்பாலான கோயில் களில் பாதுகாப்பிற்காக காம்பவுண்ட் சுவர் அமைத்து, பக்தர்கள் வழிபடும் வேளையில், ராம நாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரம் ஜக்கம்மாள் கோயிலில் ஆண்டுக்கொ
ருமுறை ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவுக்காக குண்டாறு, செங் கோட்டை, மலட்டாறு, முத்தாலங்களும் பகுதியில் இலந்தை மர முள் செடிகளை வெட்டி, ஜக்கம்மாள் கோயிலில் வேலி அமைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கட்டபொம்மன் வழி வந்தவர்கள் தங்கி இருக்கும் நாராயணபுரத்தில், கட்டபொம்மன் வழிபட்ட ஜக்கம்மாளை வழிபடுவது வழக்கம். ஜக்கம்மாள், காவல் தெய்வம் பட்டத்து துளசி அம்மன் கோயில் திருவிழா ஆவணி மாதந்தோறும் கொண்டாடப்படும்.
இப்பொங்கல் விழாவிற்காக பசு மாட்டினை கிராமத்திற்குட்பட்டு பொதுவாக வளர்த்து, திருவிழா நாளன்று, கோயிலுக்குள் அழைத்து வந்து அபிஷேகம் செய்து, கிராமத்திற்குள் வீடு வீடாக அழைத்து சென்று, மழை, செல்வம் கொழிக்கவும். நோயின்றி மக்களை காக்கவும் கோமாதாவை வழிபாடு நடத்தப்படும். கோயில் குடிமக்கள் கோயிலுக்கு காம்பவுண்ட்
சுவர் அமைக்க போதுமான நிதியுதவி அளிக்க முன் வந்தாலும், பாரம்பரிய முறைப்படி கோயிலை சுற்றிலும் பாதுகாப்பு வேலிக்காக இலந்தை மர முள் செடிகளை நேர்த்திகடனாக பலர் பல்வேறு கிராமங்களிலிருந்த வெட்டி வந்து, சேர்ப்பர். இதனால் அம்மை, நோய்
நொடியிலிருந்து அம்மன் காக்கும் என்பது ஐதீகம்.