உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனியில் தொழில் வெற்றி தரும் எல்லை கருப்பசாமி

தேனியில் தொழில் வெற்றி தரும் எல்லை கருப்பசாமி

தேனி: நாட்டார் இனகடவுள்கள் கோபம் கொண்டவர்களாக மலை, காடு மற்றும் ஊரின் ஒதுக்குப்புறங்களில் எல்லைக்காவல் கடவுளாக உள்ளனர். அந்த வரிசøயில் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் வழிபடும் விதமாக ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூர் அருகே காட்டுப்பகுதியில் தாழையடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு மூன்றாம் தலைமுறை பூஜாரியாக இருக்கும் கருப்பையா கூறியதாவது:
எங்கள் ஊரின் நரசிங்கப்பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. அதுபோல தாழையடி கருப் பசாமி கோயில் 300 ஆண்டுகளுக்கு பழமையானது. காவல் தெய்வமாக இருக்கிறது. காட்டின் நடுவே ஓடையின் கரையில் இக்கோயில் ரம்மியமாக அமைந்துள்ளது. இங்கு தைப்பொங்கல், ஆடி பதினெட்டு, மாசி பச்சை எனப்படும் சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் இங்கு வந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்வர். கருப்பசாமியின் அருகே லாட சன்னாசி கன்னிமார் உள்ளார்.

இவர்களுக்கு சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்யப்படுகிறது.கருப்பசாமியை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் தடைநீங்கி திருமணம் நடக்கும். உடல் நலம் குணமடைந்து, வேலை வாய்ப்பு, தொழிலில் வெற்றி கிடைக்கும். என உணர்வுப்பூர்வமாக கூறும் பக்தர்கள் பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்றிச் செல்கின்றனர். சித்திரை திருவிழா, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும், என்றார். இவரிடம் பேச 83440 97712


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !