உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் மலை தூய்மை பணியில் இறைபக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மலை தூய்மை பணியில் இறைபக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வனமும், வனம் சார்ந்த பகுதிகளும், இயற்கையால் மனித சமுதாயத்திற்கு அளித்த கொடை, இப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகளின் மாசுக்கள் இல்லாத காற்றும், குளிர்ந்த நீரோடைகளும், பசுமை சூழ்நிலையும் மக்கள் மனதினை என்றென்றும் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அதனால் தான் இன்றும் கோடை விடுமறை நாட்களை கழிக்க, மலை தலங்களை நோக்கி மக்கள் பயணிக்கின்றனர். அதிலும் தங்கள் பயணம் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் இறை பயணங்களாக இருக்கவேண்டும் எனகருதி, இன்று நாட்டின் பலபகுதிகளிலிருந்து சதுரகிரிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை  நாளுக்குநாள்
அதிகரித்து வருகிறது.

அவ்வாறு வருபவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட் பேப்பர்கள் என சதுரகிரி மாசுபட்டு வருகிறது.

இத்தகைய மாசுக்களிலிருந்து மலையின் புனிதத்தை காக்கும் அரும்பணியில், தென்கை லாய பக்தி பேரவையின் சார்பில் நடந்த உழவாரப்பணியில், மலையின் அடிவாரப்பகுதி யிலிருந்து கோயில் வரை இருந்த மாசுக்கள் அகற்றப்பட்டது.

இப்பணியில் தன்னார்வத்தொண்டர்கள், சிவபக்தர், வனத்துறையினர், கோயில் நிர்வாகிகள், ஆர்.ஆர்.மடம் மற்றும் ஆனைமலை சித்தர் மடத்தினர், ஈஷா தொண்டர்கள் பங்கேற்று தூய்மைப்பணி செய்தது, சதுரகிரியின் புனிதத்தை காப்பாற்றும் விதத்தில் இருந்தது.
பாராட்டுக்குரியது கூட.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !