உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.43 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.43 லட்சம்

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று (மே 25)ல்  எண்ணப்பட்டது. இதில், 43.81 லட்சம் ரூபாயும், 330 கிராம் தங்கமும் கிடைத்தது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, பல மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

பக்தர்களால் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ண ப்படும்.(மே 25)ல் நேற்று காலை, கோவில் செயல் அலுவலர் விஜயன் மற்றும் கோவில் ஸ்ரீகாரியம் முன்னிலையில், உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 43.81 லட்சம் ரூபாயும், 330 கிராம் தங்கம், 587 கிராம் வெள்ளி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !