பள்ளிப்பட்டு ஈச்சம்பாடியில் சம்வத்சர ஜெயந்தி
ADDED :2730 days ago
பள்ளிப்பட்டு: ஈச்சம்பாடி, விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவிலில், வரும் 3ம் தேதி, முதலாம் ஆண்டு சம்வத்சர ஜெயந்தி துவங்குகிறது. மறுநாள், மகாசாந்தி யாகம்
நடைபெறும்.
பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில், பழமையான இந்த கோவில், கடந்த ஆண்டு புதுப்பிக்கப் பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் 3ம் தேதி, முதல் முறையாக, சம்வத்சர ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது.
மறுநாள், திங்கள்கிழமை, காலை 7:00 மணிக்கு, விஸ்வரூபம், கும்ப ஆராதனம், மகாசாந்தி யாகம் நடைபெறும். 10:30 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனமும், 12:00 மணிக்கு கலச திருமஞ் சனம், சாற்றுமறை நடக்கிறது.