உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

காளையார்கோவில்: காளையார்கோவிலில் உள்ள சவுந்திரநாயகி அம்பாள் – சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்  நடந்தது. காளையார்கோவில் சவுந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக பிரம்மோத்ஸவ விழா  மே 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிேஷகங்கள், தீபாராதனை நடந்து வருகின்றன.  5 ம் நாளில் அம்பாள் – சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.

9 ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் பெரிய தேரில் சோமேஸ்வரரும்,  சிறிய தேரில் சவுந்திரநாயகி அம்பாளும் காட்சியளித்தனர்.  பின்னர் பெரிய தேரை ஆண் பக்தர்களும், சிறிய தேரை பெண் பக்தர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, ஏ.எல்.ஆர்., அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 10 ம் நாளான இன்று (மே 28) தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.  தண்ணீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் சுவாமியும், அம்பாளும் மூன்று முறை சுற்றி வர, கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் மற்றும் நகரத்தார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !