உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்: சிவகாசியில் காவடி எடுத்த சிறுவர்கள்

வைகாசி விசாகம்: சிவகாசியில் காவடி எடுத்த சிறுவர்கள்

சிவகாசி: சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவர்கள் காவடி எடுத்து நேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.காத்தநாடார் தெரு முத்தாலம்மன்கோயிலில் துவங்கிய காவடி முருகன்கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ஐயாநாராயணசுவாமி கோயில் வழியாக, திருத்தங்கல் முருகன் கோயில் வந்தனர். கந்தவேல் முருகா, கதிர்வேல் முருகா என்று கோஷங்கள் முழங்க சிறுவர்கள் காவடி எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை காத்த நாடார் தெருக்கட்டு தலைவர் கதிரேசன் மற்றும் சிவகாசி நகர வர்த்தக சங்க தலைவர் சமுத்திரபாண்டியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !