சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜோர்
ADDED :2721 days ago
அந்தியூர்: அந்தியூர், பச்சாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளிபாளையத்தில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா, நேற்று காலை கோலாகலமாக நடந்தது. பச்சாம்பாளையம், அந்தியூர், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம் பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் கலந்து கொண்டனர்.