நீலமேக பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம்
ADDED :2721 days ago
குளித்தலை: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, நீலமேக பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. குளித்தலை வைசியர் தெருவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், நீலமேக பெருமாள் கோவில் உள்ளது. இதில், வைகாசி விசாக திருவிழா கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் சுவாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 26ல், சுவாமி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை, 5.45 மணியளவில் நடக்கிறது. நகராட்சி அலுவலகம், பஜனை மடம், கடைவீதி, அக்ரஹாரம் வழியாக சென்று, திருத்தேர் நிலைக்கு வரும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை, 6:00 மணியளவில், சுவாமி தீர்த்தவாரி, 8:00 மணியளவில் தேர்கால் மண்டகபடி நடக்கிறது.