ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கோவை;பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 26ல் துவங்கியது; ஜூன் 6ல் நிறைவடைகிறது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அமைந் துள்ளது, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 26ம் தேதி மாலை, கருடபிரதிஷ்டையுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கின்றன. விழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில், சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று காலை, நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, நம்மாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை, சூர்பிரவை வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, சுவாமி சன்னதி புறப்பாடும், மாலை, 5:00 மணிக்கு, திருமஞ்சனமும், இரவு, 7:00 மணிக்கு, சஷே வாகனத்தில், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, சந்திரபிரபை வாகனத்தில், வீதியுலாவும், வரும் 31ம் தேதி காலை, 6:00 மணிக்கு, நாச்சியார் அலங்காரமும், இரவு, 7:30 மணிக்கு, கருட வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.