ஹரிஹர புத்திர அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :2721 days ago
மேலுார், மேலுார் அருகே சாத்தமங்கலத்தில் ஹரிஹர புத்திர அய்யனார் கோயில் வைகாசி புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து நேர்த்திக்கடன் குதிரைகளை சாத்தமங்கலம் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லகிராமத்தினர் முயன்றனர். ஆனால் போலீசார் மேளம் கொட்டுவதில்பிரச்னை உள்ளதால் கலெக்டரிடம் அனுமதி வாங்க வலியுறுத்தினர். ஆத்திரமுற்ற கிராமத்தினர் காரைக்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களுடன் பேசியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.