மன்னித்தால்... மண்ணும்கூட பொன்னாகும்
ADDED :2729 days ago
இப்போது ஒரு வீட்டுமனை வாங்கிப் போட்டு, அடுத்த சில ஆண்டுகளில் விற்றால் அதிக லாபம் கிடைக்கிறது. மண் பொன்னாகிறது என்று சொல்கிறார்கள். இஸ்லாம் மண் பொன்னாவதைப் பற்றி வேறு மாதிரியாகச் சொல்கிறது. புளைலிப்னு இயால் என்பவர் கொள்ளைக்காரராக இருந்தார். ஒரு சமயம் ஒரு பெரியவர் குர்ஆன் வாசிப்பதை அவர் கேட்டார். அதிலுள்ள ஒரு வசனம் இயாலின் மனதில் புயலைஏற்படுத்தியது. அந்தக் கணத்திலேயே அவர் கொள்ளைத் தொழிலை கைவிட்டார். “யாருடைய பொருளை நாம் அநியாயமாக எடுத்தோமோ, அதை அவரிடமே கொடுத்து, மன்னிப்பும் கேட்டால் பாவம் மன்னிக்கப் படும்” என்ற ரீதியில் அந்த வசனம் இருந்தது. இயாலும், அதனடிப்படையில், யாரிடம் எல்லாம் கொள்ளை அடித்தாரோ அவர்களைத் தேடிப்பிடித்து, பொருட்களை ஒப்படைத்து மன்னிப்பும் கேட்டார்.