மானாமதுரை அருகே புரவி எடுப்பு விழா
ADDED :2724 days ago
மானாமதுரை : மானாமதுரை அருகே சூரக்குளம் கிராமத்தில் நடந்த புரவி எடுப்பு விழாவில் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை அருகே சூரக்குளம் கிராமத்தில் உள்ள கள்ளவேட்டை அய்யனார் கோயிலில் கள்ளவேட்டை அய்யனார் சுவாமியை குலதெய்வமாக வழிபடும் டி.பறையங்குளம், தெப்பத்துபட்டி, ஓடாத்துார், மணக்குளம், மினாக்குளம், வழிமறிச்சான், உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது உறவினர்களோடு சேர்ந்து மானாமதுரையில் செய்யப்பட்ட புரவி மற்றும் காளை,சாமி உருவங்கள்ஆகியவற்றை தலைச்சுமையாக சூரக்குளத்தில் உள்ள கள்ளவேட்டை அய்யனார் கோயிலுக்கு துாக்கி சென்றுசிறப்பு பூஜை நடத்தி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் வழங்கினர். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.