முத்தாலம்மன் கோயிலில் பால்குட வழிபாடு
ADDED :2724 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் சக்கராஜா கோட்டை முத்தாலம்மன் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு 108 பால் குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. காலை முதல் அம்மனுக்கு சிறப்புஅபிேஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோயில் திடலை அடைந்தனர்.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்தாலம்மன் பஜனை குழுவினர் செய்திருந்தனர்.