உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையானுக்கு ரூ.1.75 கோடி மதிப்புள்ள ‘சூரிய கட்டாரி’ நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு ரூ.1.75 கோடி மதிப்புள்ள ‘சூரிய கட்டாரி’ நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, சூரிய கட்டாரியை தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கினார். தமிழகத்தின், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தங்கதுரை, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை சுப்ரபாத சேவையில், ஏழுமலையானை
தரிசிக்க சென்றார். அப்போது அவர், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 16 கிலோ எடைஉள்ள, தங்கத்தால் செய்யப்பட்ட சூரிய கட்டாரியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க எடுத்துச் சென்றார். கோவிலுக்குள் சென்றதும், அதை அவர், தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார். அதை பெற்ற அதிகாரிகள், விசேஷ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிப்பதாக தெரிவித்தனர். கடந்த, 1989ல் கர்நாடக முதல்வராக, வீரேந்திர பாட்டீல் பதவி வகித்தபோது, அம்மாநில அரசு சார்பில், இதே போல் ஒரு சூரிய கட்டாரி, ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குத்து வாள் என்பது தான், சூரிய கட்டாரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !