காஞ்சி பெரியவர் 125வது ஜெயந்தி : 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
ADDED :2725 days ago
தஞ்சாவூர்: காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 125வது ஜெயந்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில் நேற்று, 80 இடங்களில், 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.காஞ்சி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின், 125வது ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று கும்பகோணம் சங்கர மடத்தில், புஷ்பாஞ்சலி நடந்தது.ஞானஹதா அமைப்பின் சார்பில், கும்பகோணம் நகரத்தில், 80 இடங்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்காக, 10 டன் அரிசி, 10 டன் காய்கறிகள் வாங்கி, வீரசைவ பெரிய மடத்தில் உணவு தயாரித்து, வேன்கள் மூலம், 80 மையங்களுக்கும் தன்னார்வலர்கள் எடுத்து சென்று, உணவுகளை பரிமாறினர். அன்னதான பணிக்கு அரசு மற்றும் தனியார் முன்னணி வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் தேவையான உதவிகளை செய்திருந்தன.