உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

சாலவாக்கம்: சாலவாக்கம் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை ஒட்டி, நேற்று இரவு, கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறத்தின் மலையடிவாரத்தில் பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் தினசரி, இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. கடந்த மாதம், சித்திர பவுர்ணமியை ஒட்டி, இந்த கோவில்களில் முதல் முறையாக கிரிவலம் துவக்கப்பட்டது. அதையடுத்து, மாதந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை, 6:00 மணிக்கு சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பூஜைகள் நடந்தன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சாலவாக்கம் மலையடிவாரத்தில் உள்ள பைரவர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி, கிரிவலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !