பல்லக்கில் மாட வீதி உலா வந்த அருணாசலேஸ்வரர்
ADDED :2792 days ago
திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று, வீதிஉலா வந்த அருணாசலேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்னி நட்சத்திரம், கடந்த, 4ல், துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலச பூஜை அருணாசலேஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து, இரவு பல்லக்கில், விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பல்லக்கில், மாடவீதி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் கருவறைக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள், வீதி உலா வந்த சுவாமியை வழிபட்டனர்.