வல்லம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
                              ADDED :2711 days ago 
                            
                          
                           கிருஷ்ணராயபுரம்: வல்லம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லத்தில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, நேற்று முன்தினம் காலை பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோவிலைச் சுற்றி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிடா வெட்டுதல் நடந்தது.