காளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால் குட ஊர்வலம்
                              ADDED :2711 days ago 
                            
                          
                          குளித்தலை: குளித்தலை அடுத்த கீழவதியம் காளியம்மன் கோவில் திருவிழாயையொட்டி, கிராம மக்கள், பக்தர்கள் வதியம் காவிரி ஆற்றில் பால் குடம், தீர்த்தக் குடம், அக்னிச் சட்டி எடுத்து ஊர்வலம் வந்தனர். மேள தாளத்துடன் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. பின் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ராஜேந்திரம் மலையாளி, மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, ராஜேந்திரம், மருதூர் கிராம மக்கள், காவிரி ஆற்றிலிருந்து, பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மாலையில், அக்னிச் சட்டி எடுத்து, அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இன்றிரவு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.