பூப்பல்லக்கில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் வீதி உலா
ADDED :2711 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 20ல் கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் சுவாமி வெள்ளி வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மே 24ல் திருக்கல்யாணமும், மே 25ல் கழுவன் திருவிழாவும், மே 27ல் புரவியெடுப்பும் நடந்தது. மே 28ல் தேரோட்டம் நடந்தது. கடைசி நாளான நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பூப்பல்லக்கு புறப்பட்டது. ரதவீதிகளின் வழியாக வந்த பூப்பல்லக்கு அதிகாலை 5:30 மணிக்கு நிலையை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு உற்ஸவமூர்த்தி கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். விழாவை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.