உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருநுாத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் கழுமர ஏற்றம்

மருநுாத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் கழுமர ஏற்றம்

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே மருநுாத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் நடந்த கோயில் விழாவை முன்னிட்டு கழுமர ஏற்றம் நடந்தது. கடந்த மே 15 ல் சாட்டுதலுடன் முத்தாலம்மன், பட்டாளம்மன், காளியம்மன், பகவதியம்மன், கோட்டை கருப்பு, சின்னகருப்பு, சங்கிலிகருப்பு, பட்டாணி, காமாட்சியம்மன், பாத்திமா நாச்சியார், பாலமுருகன், மாலைகருப்பு ஆகிய சுவாமிகளின் கோயில் விழா துவங்கியது. மறுநாள் ஏழு ஊற்று தோண்டி சின்னகருப்பு கோயிலுக்கு சுத்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

மே 25ல் சாமிமலை பாலமுருகன் கோயில் கொடியேற்றம், சின்னகருப்பு, சங்கிலி கருப்பு கோயில் பெட்டி அழைப்பு மற்றும் கிடா வெட்டு நடந்தது. மறுநாள் பட்டாணி சுவாமிக்கு கிடா கந்திரி கொடுத்தல் மற்றும் பாத்தியா ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் முத்தாலம்மனுக்கு முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தலை தொடர்ந்து கிடா வெட்டி வழிபாடு நடந்தது. நேற்று படுகளத்தை தொடர்ந்து கழுமர ஏற்றம் நடந்தது. இன்று முருகனுக்கு கண் திறந்து மலை சென்றவுடன் எருது ஓட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் மாலைக்கருப்பு சுவாமிக்கு கிடா வெட்டு நடக்கிறது. மருநுாத்து, சாமிநாதபுரம், கண்ணமனுார், புதுஆவிளிபட்டி, அரண்மனையூர், கோட்டைப்பட்டி, ஆவிளிபட்டி, ஜோத்தாம்பட்டி, மணியகாரன்பட்ட,பூவகிழவன்பட்டி ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !