உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறை சீதேவி அம்மன் கோவில் குண்டம் விழா ஜோர்

பெருந்துறை சீதேவி அம்மன் கோவில் குண்டம் விழா ஜோர்

பெருந்துறை: காஞ்சிக்கோவில், சீதேவிஅம்மன் கோவில் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடந்தது. பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், சீதேவிஅம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை தீ மிதிக்கும் நிகழ்வு நடந்தது. இதற்காக கோவில் முன், 60 அடி நீளத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. தலைமை பூசாரி முதலில் இறங்கி, விழாவை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, 15 நாட்கள் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், வெள்ளை ஆடை அணிந்து, குண்டம் இறங்கினர். காஞ்சிக்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !