உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறு திருப்பதி கோவிலில் 25ல் கும்பாபிஷேகம்

சிறு திருப்பதி கோவிலில் 25ல் கும்பாபிஷேகம்

சென்னை:சிறு திருப்பதி என அழைக்ககூடிய, சிறுதாமூர், வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில், வரும், 25ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாமூர் கிராமத்தில், வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், சிறு திருப்பதி என்றும்; மூலவர், வெற்றி வழங்கும் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு இடையே, மைய பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில், பல ஆண்டுகளுக்கு பின், தற்போது, 69 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம், ஜூன், 25ல் நடைபெற உள்ளது. இதை, சிறுதாமூர், ஸ்ரீனிவாசர் அறக்கட்டளையும், சிறுதாமூர் கிராம பொதுமக்களும் இணைந்து நடத்துகின்றனர். அறக்கட்டளையின் அறங்காவலர், விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோர், கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு, 9600644446 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !