பழநி கடைகளில் ஏமாறும் வெளியூர் பக்தர்கள்
ADDED :2723 days ago
பழநி, பழநி அடிவாரம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் முத்திரையிடப்படாத அளவைகள், தராசுகள், எடைக்கற்களை பயன்பயடுத்துவதால் வெளியூர் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். பழநி முருகன்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவீதி, அடிவாரம், சன்னதிவீதி, காந்திரோடு, பஸ் ஸ்டாண்ட், உழவர்சந்தை ரோடு பகுதிகளில் கடைகளில் முத்திரையிடப்படாத எடைக்கற்கள், போலி தராசுகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு பொருட்கள் வாங்கும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.