உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம்: திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் ஸ்ரீ பெரியகாண்டியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, 3ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜைகளை, தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தது. அதன்பின், பக்தர்கள் முளைப்பாலிகை மற்றும் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று, காலை கோபுரத்தில் கலசம் வைத்தல், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜை, இரவு கருவறையில் சுவாமி வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை பெரியகாண்டியம்மனுக்கு சீர் கொண்டு வரும் வேங்கல நாட்டு பிறந்த இடத்து பெண்களை கோவில் வீட்டிலிருந்து மங்கள இசை முழங்க அழைத்து வருதல், 10:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, கோவில் பிரகார உலா, மூலவர் மற்றும் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், 10:50 மணிக்கு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !